Home Featured உலகம் இஸ்தான்புல்: தாக்குதல் நடத்தியவன் தேடப்படுகிறான்! ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றது!

இஸ்தான்புல்: தாக்குதல் நடத்தியவன் தேடப்படுகிறான்! ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றது!

1005
0
SHARE
Ad

ISIS-Flag-Featureஇஸ்தான்புல் – இங்கு புத்தாண்டுக்கு முதல் நாள் இரவு விடுதி ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய தாக்குதல்காரன் தப்பி விட்டான் என்றும் அவனை துருக்கிய காவல் துறையினர் தேடி வருகின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் மரணமடைந்த 39 பேரில் இருவர் இந்தியர்களாவர். அதில் ஒருவரான அபிஸ் ரிஸ்வி பிரபல இந்திப் படவுலக இயக்குநரும், தயாரிப்பாளருமாவார்.

இந்தத் தாக்குதலில் மரணமடைந்தவர்களில் ஏறத்தாழ 24 பேர் துருக்கி நாட்டவர்களல்ல. மாறாக வெளிநாட்டவர்கள் ஆவர்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் இஸ்தான்புல் இரவு விடுதித் தாக்குதலுக்கு பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.