Home Featured இந்தியா அனுராக் தாகூர் கிரிக்கெட் சங்கத் தலைவராக அதிரடி நீக்கம்!

அனுராக் தாகூர் கிரிக்கெட் சங்கத் தலைவராக அதிரடி நீக்கம்!

842
0
SHARE
Ad

anurag-thakur-bcci-president

புதுடில்லி – பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து அனுராக் தாகூர் (படம்) செயலாளர் அஜய் ஷிர்கே இருவரையும் உச்ச நீதிமன்றம் அதிரடியாக நீக்கியுள்ளது.

லோதா குழு கிரிக்கெட் சங்கத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள செய்திருந்த பரிந்துரைகளை அமுல்படுத்த இடையூறாக இருந்தார் என்ற காரணத்திற்காக அனுராக் தாகூர் நீக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தவும் அனுராக் தடையாக இருந்த காரணத்தால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கவும் உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

தலைவர், செயலாளர் பதவிகள் மீண்டும் நிரப்பப்படும்வரை இடைக்கால நிர்வாகக் குழு மூலம் பிசிசிஐ அமைப்பு இயங்கி வரவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிசிசிஐ-யின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் முன்னாள் நீதிபதி லோதா தலைமையிலான குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த பிசிசிஐ தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தது.

லோதா பரிந்துரைகள் அமல்படுத்த தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

இதற்கிடையில் தனது பதவி நீக்கம் குறித்து கருத்துரைத்துள்ள அனுராக் விளையாட்டு மன்றங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான் தாங்கள் உச்ச நீதிமன்றத்தின் முடிவுகளுக்கு எதிர்ப்பு காட்டுவதாக தெரிவித்துள்ளார்.