Home Featured இந்தியா மோடி-ஓபிஎஸ் சந்திப்பு: அவசரச் சட்டம் கிடையாது!

மோடி-ஓபிஎஸ் சந்திப்பு: அவசரச் சட்டம் கிடையாது!

1065
0
SHARE
Ad

narendra modi-panneer selvam-jallikattu

புதுடில்லி – இன்று வியாழக்கிழமை காலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு எந்தவித முன்னேற்றமும் இன்றி முடிவடைந்தன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜல்லிக்கட்டு, கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறியுள்ள மோடி, தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு ஒத்துழைக்கும், ஆதரவளிக்கும் என்றும் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

ஜல்லிக்கட்டு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருப்பதையும் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், அவசரச் சட்டம் ஒன்றை உடனடியாக இயற்றுவதற்கான வாய்ப்பில்லை என மோடி கைவிரித்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

panneer selvam-narendra modi-jallikattu

மோடியிடம் தனது கோரிக்கைகளை முன் வைக்கும் பன்னீர் செல்வம்…