Home உலகம் உக்ரேனில் மோடி! மருத்துவ உதவிகள் வழங்கினார்!

உக்ரேனில் மோடி! மருத்துவ உதவிகள் வழங்கினார்!

387
0
SHARE
Ad

கீவ் (உக்ரேன்) – போர் சூழ்ந்துள்ள உக்ரேன் நாட்டுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு அந்நாட்டுத் தலைகநகர் கீவ் சென்றடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கு உக்ரேனிய அதிபர் செலன்ஸ்கியுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.

இந்திய அரசாங்கத்தின் சார்பில் உக்ரேனுக்கு சுகாதார, மருத்துவ உதவிகளையும் மோடி செலன்ஸ்கியிடம் வழங்கினார். மருந்துகள், மருத்துவ வசதிக்கான சாதனங்கள் அடங்கிய பெட்டிகள் மோடி வருகையை முன்னிட்டு உக்ரேனுக்கு அனுப்பப்பட்டன.

உக்ரேனுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் வருகை இதுவாகும். போலந்து நாட்டுக்கான வருகையை முடித்துக் கொண்டு மோடி உக்ரேன் வந்தடைந்தார்.

#TamilSchoolmychoice

உக்ரேனிலுள்ள இந்திய வம்சாவளியினரையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடினார்.