Home உலகம் பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையில் மோடி – ஜீ ஜின் பிங் சந்திப்பு!

பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையில் மோடி – ஜீ ஜின் பிங் சந்திப்பு!

215
0
SHARE
Ad

மாஸ்கோ : ரஷியாவின் காஸான் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) உச்சநிலைத் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அதே மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் சந்திப்பு நடத்தினார்.

எல்லைப் பிரச்சனை தொடர்பில் இந்தியா – சீனா இடையில் நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து இரு தரப்புகளும் பேச்சு வார்த்தைகள் நடத்தின.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் தற்போது சீனா, ரஷியா, இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகியவை இணைந்துள்ளன. இந்தக் கூட்டமைப்பில் இணைய மலேசியாவும் விருப்பம் கொண்டுள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

இந்தக் கூட்டமைப்பில் மேலும் 30 நாடுகள் இணைய ஆர்வம் கொண்டுள்ளதாகவும் காசான் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.