Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : சிம்பிலி சவுத்தைக் கண்டறிக – VIU-இல் சேமிப்பையும் 2 புதிய அலைவரிசைகளையும் அனுபவியுங்கள்

ஆஸ்ட்ரோ : சிம்பிலி சவுத்தைக் கண்டறிக – VIU-இல் சேமிப்பையும் 2 புதிய அலைவரிசைகளையும் அனுபவியுங்கள்

276
0
SHARE
Ad

*சிம்பிலி சவுத்தைக் கண்டறிக, VIU-இல் சேமிப்பையும் ஆஸ்ட்ரோவில் 2 புதிய அலைவரிசைகளையும் அனுபவியுங்கள்.

*நவம்பர் 1, 2024 முதல் ஒளியேறும் புதிய அலைவரிசைகளான Blippi & Friends மற்றும் Oppa Mania உடன் எங்களின் JUALAN JIMAT BESAR சலுகைத் தொடர்கிறது

கோலாலம்பூர் – இன்னும் அதிகச் சேமிப்பிற்குத் தயாராகுங்கள்! சிம்பிலி சவுத் ஸ்ட்ரீமிங் சேவையின் துவக்கம், Viu-க்கான வரையறுக்கப்பட்டக் காலச் சலுகை, மற்றும் நவம்பர் 1, 2024 முதல் ஒளியேறும் இரண்டு புதிய அலைவரிசைகளான, Blippi & Friends மற்றும் Oppa Mania ஆகிய அற்புதமானப் புதிய அம்சங்களுடன் அமோக வரவேற்புக் காரணமாக ஆஸ்ட்ரோ அதன் JUALAN JIMAT BESAR சலுகையை விரிவுப்படுத்துகிறது. இந்த அற்புதமானப் புதிய அம்சங்களுடன் எங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த மதிப்பு மற்றும் சேவையை வழங்க ஆஸ்ட்ரோ உறுதி பூண்டுள்ளது.

#TamilSchoolmychoice

சிறந்த உள்ளூர் மற்றும் பன்னாட்டு பொழுதுபோக்கு நிகழ்ச்சி, “Andai Tiada Dia”; ஆஸ்ட்ரோவின் அசல் நிகழ்ச்சி, “Project; EXIT”; சிறந்தத் தரமதிப்பீடுப் பெற்றச் சீனத் தொடர், “The Great Resonance”; ஹிட் தமிழ் தொடரானப் “பசங்க சீசன் 2”; குழந்தைகளுக்கு ஏற்ற நிகழ்ச்சியான “Hikayat Bawang Putih Bawang Merah” ஆகியவற்றை வெறும் ரிம 41.99 கட்டணத்திலிருந்து ஆஸ்ட்ரோவில் கண்டு மகிழுங்கள். பிரீமியர் லீக், பி.டபள்யு.எவ் போட்டிகள் (BWF Tournaments), லிகா மலேசியா, செபாக் டக்ரோ லீக், ஃபார்முலா 1, மோத்தோஜிபி (MotoGP), என்.பி.ஏ (NBA), கிரிக்கெட், டென்னிஸ் மற்றும் பல நேரலை விளையாட்டுகளைக் கண்டு களியுங்கள். ஆஸ்ட்ரோவில் அனைவருக்கும் ஏதோ ஒன்று இருக்கிறது!

ஆஸ்ட்ரோவில் வெறும் ரிம10/மாதம் செலுத்திச் சிம்பிலி சவுத் செயலியை ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்.

பண்டிகைகளைக் கொண்டாடும் சரியானத் தருணத்தில், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளின் அணிவகுப்பை உள்ளடக்கிய ஸ்ட்ரீமிங் சேவையானச் சிம்பிலி சவுத் என்ற ஸ்ட்ரீமிங் செயலியை, அக்டோபர் 24, 2024 முதல், ரிம10/மாதக் கட்டணத்தில் (பரிந்துரைக்கப்பட்டச் சில்லறை விலை (RRP) ரிம 14.90) ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் சந்தாவில் இணைத்துக் கொள்ளலாம். உங்கள் அல்ட்ரா/அல்டி பெட்டிகள், இணையம் அல்லது கைப்பேசிச் செயலிகள் ஆகியவற்றில் சமீபத்தியத் திரைப்படங்கள், பசுமையானப் பழைய நிகழ்ச்சிகள், குறைவாக மதிப்பிடப்பட்ட விருதுகள் வென்றத் திரைப்படங்கள், பெரியப் பட்ஜெட் பிளாக்பஸ்டர்கள் மற்றும் நகைச்சுவைக் கிளிப்புகள் ஆகியவற்றைக் கண்டு மகிழுங்கள். “கருடன்”, “அரண்மனை 4”, “பார்க்கிங்”, “சைரன்”, “உள்ளொழுக்கு”, “குருவாயூர் அம்பலநடையில்” போன்றப் பிரபலமானத் திரைப்படங்களை ஸ்ட்ரீம் செய்யுங்கள். 03-9543 3838 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் ஆஸ்ட்ரோவுடன் எளிதாகச் சிம்பிலி சவுத் செயலியின் சந்தாதாரராகுங்கள்.

ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்குப் பிரத்யேக Viu பிரீமியம் சலுகை
முதல் 3 மாதங்களுக்கு Viu பிரீமியத்திற்கு ரிம4.99/மாதம் (பரிந்துரைக்கப்பட்டச் சில்லறை விலை (RRP): ரிம14.90) என்றக் குறைந்தக் காலச் சலுகையை அறிவிப்பதில் ஆஸ்ட்ரோ மகிழ்ச்சியடைகிறது, இது புதியச் சந்தாதாரர்கள் எளிமையாக அணுக வழிவகுக்கும். “From Saga with Love 2”, “Hotel Del Luna”, “Taxi Driver Season 2”, “Family by Choice” மற்றும் “Reborn Rich” போன்ற ஆசிய நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளின் பரந்த நூலகத்தை Viu மூலம் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும். ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் astro.com.my/viu வழியாகச் சந்தாதாரராகலாம்.
Blippi and Friends குழந்தைகள் தொகுப்பில் இணைகிறது.

நவம்பர் 1, 2024 முதல், Blippi and Friends (அலைவரிசை 619) கூடுதல் கட்டணமின்றிக் குழந்தைகள் தொகுப்பில் இணைகிறது. ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் நவம்பர் 1, 2024 முதல் ஜனவரி 31, 2025 வரை டிவி மற்றும் ஆஸ்ட்ரோ கோ ஆகியவற்றில் Blippi and Friends-இன் இலவச மாதிரிக்காட்சியைக் கண்டுக் களிக்கலாம். “Blippi”, “Meekah”, “Supa Strikas”, “Blippi Wonders”, மற்றும் “Oddbods specials” போன்றப் பிரபலமான நிகழ்ச்சிகளைப் பாருங்கள். NJOI மற்றும் sooka-இல் Blippi and Friends வாங்குவதற்குக் கிடைக்கப்பெறும்.

Oppa Mania அலைவரிசையில் கே-நாடகம், கே-பாப் மற்றும் பல அனைத்து  ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் 1 முதல் 30 நவம்பர் 2024 முதல் புதிய இலவச முன்னோட்ட அலைவரிசையான Oppa Mania (அலைவரிசை 100)-ஐ கண்டு இரசிக்கலாம். இந்தப் புதிய அலைவரிசையில் பரபரப்பானக் கே-பாப் உள்ளடக்கம், பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன், கொரிய மற்றும் தாய்லாந்து நாடகங்கள் இடம்பெறும். “Perfect Family”, “The Law Cafe”, மற்றும் “Connection” போன்ற வெற்றிகரமான நாடகங்களில் இடம்பெற்றுள்ள முன்னணி நடிகர்களால் கவரப்படத் தயாராகுங்கள். உங்களுக்குப் பிடித்தமானக் கே-ஐடல்கள் இடம்பெறும் பிரபலமானப் பல்வேறு மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிளுடன் கே-பாப் கச்சேரிகளின் கேளிக்கைகளில் சேருங்கள். “The Childe”, “Midnight”, “Project Wolf Hunting” மற்றும் பலக் கொரியப் பிளாக்பஸ்டர்களைத் தவறவிடாதீர்கள்.

ஆஸ்ட்ரோவில் சந்தாதாரராகப் பதிவுச் செய்து, மின் சாதனங்களுக்கு ரிம300 தள்ளுபடியைப் பெறுங்கள்

TBC Elektrik, Courts Malaysia மற்றும் Suria Jerai Electrical உடன் ஆஸ்ட்ரோ இணைந்து உங்களுக்கு ஓர் அருமையானச் சலுகையை வழங்குகிறது! ஏதேனும் இந்தக் கடைகளில் ஆஸ்ட்ரோ சந்தாதாரராகப் பதிவுச் செய்யும் வாடிக்கையாளர்கள், ரிம300 பற்றுச்சீட்டுகளைப் பெற்று எந்த மின் சாதனங்களை வாங்கவும் அதனைப் பயன்படுத்தலாம்*. உங்களுக்குப் பிடித்தமான ஆஸ்ட்ரோ உள்ளடக்கத்தைக் கண்டு இரசிப்பதோடு உங்களின் புதியத் தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி அல்லது வேறு ஏதேனும் வீட்டு உபயோகப் பொருட்களுக்குத் தள்ளுபடியைப் பெறலாம்.

ரிம100,000 வரை வெல்வதற்குப் பற்றுச்சீட்டுகள் உள்ளன, எனவே இந்தச் சலுகையைத் தவறவிடாதீர்கள்! மேல் விபரங்களுக்கு https://promotions.astro.com.my/bm/details/jualanjimatbesar எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

புதிய ஆஸ்ட்ரோவின் புதிய வரையறுக்கப்பட்டக் காலச் சலுகையான JUALAN JIMAT BESAR-இல் இதுவரை இல்லாதக் குறைந்த விலையில் ரிம41.99/மாதக் கட்டணம் மற்றும் இலவச நிறுவலுக்குப் பதிவுச் செய்யவும். 24 மாதங்களுக்கு மாதத்திற்கு ரிம 149.99 (பரிந்துரைக்கப்பட்டச் சில்லறை விலை (RRP): ரிம 239.99)-க்குப் பிரைமரி தொகுப்புடன் ஆஸ்ட்ரோ ஃபைபர்-இன் 500Mbps வேகத்தைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மேம்படுத்துங்கள். ஒரே இடத்தில் சிறந்தப் பொழுதுபோக்கை அனுபவியுங்கள்! சந்தாதாரராக மேல் விபரங்களுக்கு astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

*இந்த வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விலைகளும் வரியை உள்ளடக்கவில்லை. ஒவ்வொரு பிரச்சாரமும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.