Home Featured நாடு அபு சயாப் பிடியில் இருந்த 2 மலேசியர்கள் மீட்கப்பட்டனர்!

அபு சயாப் பிடியில் இருந்த 2 மலேசியர்கள் மீட்கப்பட்டனர்!

1069
0
SHARE
Ad

Abu sayyafகோத்தா கினபாலு – கடந்த ஆண்டு ஜூலை மாதம் 18-ம் தேதி, அபு சயாப் இயக்கத்தினரால் கடத்தப்பட்ட 5 மலேசிய மீனவர்களில், இருவரை, தென் பிலிப்பைன்ஸ் அருகே, பிலிப்பைன்ஸ் கடற்படையினர் மீட்டனர்.

ஜோலோஸ் தீவு பகுதியில், நேற்று வியாழக்கிழமை பிலிப்பைன்ஸ் கடற்படையினர் நடத்திய அதிரடி வேட்டையில், அபு சயாப்பில் படியில் வைக்கப்பட்டிருந்த இரு மலேசியர்களான தாயுடின் அஞ்சுட் மற்றும் அப்துல் ரஹிம் (வயது 60) ஆகிய இருவரும் மீட்கப்பட்டனர்.

எனினும், எஞ்சிய மூன்று மலேசியர்களான மொகமட் சுமாடில் ரஹிம் (வயது 23), ஃபாண்டி பாக்ரன் (வயது 26), மொகமட் ரிட்சுவான் இஸ்மாயில் (வயது 32) ஆகிய மூவரும் இன்னும் அபு சயாப் பிடியில் தான் இருப்பதாக பிலிப்பைன்ஸ் கடற்படையினர் தெரிவித்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், விடுவிக்கப்பட்ட இரு மலேசியர்களின் குடும்பத்தினரும் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கும் வேளையில், பிணையில் இருக்கும் மற்ற 3 மலேசியர்களும் பத்திரமாக வீடு திரும்ப தாங்கள் பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்திருக்கின்றனர்.