Home One Line P2 விவசாயத்தை மையப்படுத்திய ‘பூமி’ படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டது!

விவசாயத்தை மையப்படுத்திய ‘பூமி’ படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டது!

145
0
SHARE

சென்னை: அண்மையில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்து பெரிய அளவில் வெற்றிப் பெற்ற திரைப்படம் கோமாளி.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜெயம் ரவி தற்போது, இயக்குநர் லக்ஷ்மண் இயக்கத்தில் தனது 25-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பூமி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது.

இதில், ஜெயம் ரவி முறுக்கு மீசையுடன் இருப்பது போன்றும், விவசாயத்தை மையமாகக் கொண்டு படம் நகரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்து வருகிறார்.

டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். தற்போதைய காலக்கட்டத்தில் ஜெயம் ரவியின் படங்களுக்கு இரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Comments