Home One Line P1 சீன மொழியில் பாடப்பட்ட தேசிய கீதம் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் பாடப்படவில்லை!- கல்வி அமைச்சு

சீன மொழியில் பாடப்பட்ட தேசிய கீதம் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் பாடப்படவில்லை!- கல்வி அமைச்சு

711
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பள்ளி ஒன்றில் தேசிய கீதத்தை சீன மொழியில் பாடும் காணொளி சமூகப் பக்கங்களில் பரவியதைத் தொடர்ந்து கல்வி அமைச்சு அது தொடர்பாக விசாரிக்கும் என்று தெரிவித்திருந்தது.

இது குறித்துப் பேசிய மலேசிய கல்வி இயக்குனர் அமின் செனின், சீன மொழியில் பாடப்பட்ட தேசிய கீதம் எந்தவொரு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியிலும் பாடப்படவில்லை என்றும், வகுப்பறையில் கற்றல் கற்பித்தலின் போதுமட்டுமே பாடப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வகுப்பறையில் கற்றல் கற்பித்தலின் போது மட்டுமே இந்த பாடல் சீன மொழியில் பாடப்பட்டுள்ளது. பள்ளியில் எந்தவொரு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியிலும் இது செய்யப்படவில்லை.” என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இருப்பினும், கல்வி அமைச்சு அனைத்து பள்ளிகளிலும் தேசிய கீதம் உள்ளிட்ட அனைத்து தேசிய அடையாளங்கள் அடிப்படைகளை தங்கள் கற்றல் கற்பித்தலில் செயல்படுத்தும் போது சரியாக பயன்படுத்த நினைவூட்ட விரும்புகிறது, இதனால் யாரும் தவறாகப் புரிந்து கொள்ள முடியாது,” என்று அவர் கூறினார்.

எந்தவொரு அதிகாரப்பூர்வ பள்ளி நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதத்தைப் பாடும் போதும்,  எந்த வடிவத்திலும் மாற்றவோ திருத்தவோ கூடாது எனும் 1968-ஆம் ஆண்டுக்கான தேசிய கீதம் சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் அவர் அனைத்து பள்ளிகளுக்கும் நினைவுபடுத்தினார்.

சுமார் அரை நிமிட காணொளியில், மாணவர்கள் வகுப்பறையில் தேசிய கீதத்தைப் பாடுவது பதிவு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், அவர்கள் பாடிய பாடல்களின் வரிகளில் எந்தவொரு குறிப்பிடத்தக்க மாற்றமும் இல்லாமல் பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.