மேலும், “ஏன் சிலர் மரியாதை செய்யவில்லை என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். தேசிய கீதம் காரணமா அல்லது வேறு ஏதும் காரணமா என்பதை மக்களின் கருத்துக்கள் மூலம் காரணங்களைத் திரட்டுவோம். அதற்கு எங்களுக்கு தகவல் தர சில ஆட்கள் உள்ளனர்.அதன் மூலம் அடுத்த ஆண்டு சுதந்திர தின கொண்டாங்களை மேலும் சிறப்பாக செய்ய அமைச்சு தயாராகும்” என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேசிய நாள், மலேசிய தினம் ஆகிய கொண்டாட்டங்களை கவனிப்பதற்கு நிரந்தரச் செயலகம் அமைக்கப்படும் என்றும் ஷாபரி சீக் கூறியுள்ளார்.