Home உலகம் “நான் மிகவும் கெட்டவன் – நான் சாவின் விளிம்பில் நிற்கிறேன்” – முன்னாள் குத்துச்சண்டை வீரர்...

“நான் மிகவும் கெட்டவன் – நான் சாவின் விளிம்பில் நிற்கிறேன்” – முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன்

768
0
SHARE
Ad

Mike-Tyson-Boxer-540x405கோலாலம்பூர், ஆகஸ்ட் 28 – ஒரு காலத்தில் குத்துச்சண்டைப் போட்டிகளில் எதிராளிகளை மிக ஆக்ரோஷமான வகையில் தாக்கியும், காதைக் கடித்தும் பல சர்ச்சைகளில் சிக்கியவர் தான் முன்னாள் பிரபல ஹெவிவெய்ட் குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் (வயது 47).

பல பிரச்சனைகளில் சிக்கி கடுமையான விமர்சனங்களை எதிர்க்கொண்டவர் தற்போது தான் சாவில் விளிம்பில் இருப்பதாகப் பேட்டியளித்துள்ளார்.

இது மட்டுமல்லாமல் 1992 ஆம் ஆண்டு கற்பழிப்பு வழக்கில் சிக்கிய டைசனுக்கு  6 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. மூன்று வருட சிறைத்தண்டனைக்கு பிறகு அவர் விடுதலையானார்.

#TamilSchoolmychoice

அதன்பின்பு,  1996-ம் ஆண்டு நடைபெற்ற இரு போட்டிகளில் வெற்றிபெற்று உலக குத்துச்சண்டை கவுன்சில் மற்றும் உலக குத்துச்சண்டை அசோசியேசன் பட்டங்களையும் வென்றார்.

அடுத்து உலக குத்துச்சண்டை அசோசியேசன் பட்டத்திற்காக 1997-ம் ஆண்டு நடந்த போட்டியில் மைக் டைசன் இவாண்டர் ஹோலிபீல்டுடன் மோதினார்.

இதில் இவாண்டர் ஹோலிபீல்டின் காதை கடித்து துப்பினார். இதனால் போட்டிகளிலிருந்து மைக் டைசன் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து மகளின் இறப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிய மைக் டைசன் மதுபானம் மற்றும் போதைப்பொருட்களுக்கு அடிமையானார்.

இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “நான் ஒரு கெட்டவன். நான் பல்வேறு கெட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கிறேன். நான் மன்னிக்கப்பட வேண்டுகிறேன். எனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ள விரும்புகிறேன். நிதானமான வாழ்க்கை வாழ விரும்புகிறேன். நான் சாக விரும்பவில்லை. ஆனால், பல்வேறு மதுபானம் மற்றும் போதைப்பொருட்களுக்கு அடிமையான நான் சாவின் விளிம்பில் நிற்கிறேன்” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.