Home கலை உலகம் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கெமிலாங் அலைவரிசை 100

ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கெமிலாங் அலைவரிசை 100

563
0
SHARE
Ad

ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கெமிலாங் அலைவரிசை 100 –
ஆகஸ்டு 21 முதல் செப்டம்பர் 18 வரை

கோலாலம்பூர் – தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் பல்வேறு நிகழ்ச்சிகள், நாடகம், ஆவணப்படங்கள், திரைப்படங்கள், டெலிமூவிகள், குறும்படங்கள் மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் போன்ற 150-க்கும் மேற்பட்ட விருப்பமானத் தலைப்புகளுடன் சிறந்த மலேசியக் கதைகள் மற்றும் பொழுதுபோக்கை வழங்கும் கெமிலாங் அலைவரிசை 100 உடன் ஆஸ்ட்ரோ இந்தத் தேசியத் தினம் மற்றும் மலேசியத் தினத்தைக் கொண்டாடுகிறது. ஆகஸ்டு 21 முதல் செப்டம்பர் 18 வரை அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கும் இந்த அலைவரிசை இலவசம்.

ஆஸ்ட்ரோ குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஹென்றி டான், கூறுகையில், “நமது தேசிய நிறங்களில் கைகள் பல இனங்களைக் குறிப்பது போல, பெருமைமிக்க மலேசியர்களாக, ஆஸ்ட்ரோ நமது தேசத்தை ஒன்றிணைக்கவும் வலுவாக நிற்கவும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறது. ஒற்றுமைக்கு நீலம், வீரத்திற்குச் சிவப்பு, தூய்மைக்கு வெள்ளை மற்றும் விசுவாசத்திற்கு மஞ்சள். நமது தேசம் பிறந்ததில் இருந்து மலேசியர்களை ஒன்றிணைத்த மதிப்புகள் இவை” எனக் கூறினார்.

டான், கூறுகையில், “எங்களின் கெமிலாங் பெர்சாமா காணொலி, 10 வயதில் பார்வையை இழந்த 19 வயது மாற்றுத்திறனாளி-வீராங்கனை, நூரின் அமலினைச் சித்தரிக்கிறது. நூரின் மூலம் இந்த நிறங்களின் உண்மையான அர்த்தத்தையும் அவை ஒவ்வொன்றும் பிரதிநிதித்துவப்படுத்தும் மதிப்புகளையும் காண்கிறோம்.”

#TamilSchoolmychoice

கெமிலாங் பெர்சாமா பிரச்சாரத்தின் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் மலேசியர்களை ஊக்குவிப்பதற்காகவும், கெமிலாங் அலைவரிசை 100 மூலம் சிறந்த மலேசியக் கதைகள் மற்றும் பொழுதுபோக்குகளைக் கொண்டாடவும் மலேசியாவின் உள்நாட்டு வணிக முத்திரையாக (பிராண்டாக), ஆஸ்ட்ரோ நன்மைக்காகக் குரல் கொடுக்க விரும்புகிறது. வாடிக்கையாளர்கள் புதிய மற்றும் முதல் ஒளிபரப்புக் காணும் தலைப்புகளின் சிறந்த நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்க முடியும்: –

• All Together Now Malaysia Merdeka Special: இந்தத் தேசியத் தினத்தில், பலதரப்பட்டத் தலைமுறையைச் சார்ந்த 70 பிரபலங்கள் All Together Now Merdeka Special கோப்பைக்காகப் போட்டியிடும் மிகப் பெரிய பிரபலங்களைக் கொண்ட நிகழ்ச்சி.

• Satu Tong, ஆண்டி தே, எலிசபெத் டான் மற்றும் ஷா இஸ்கந்தர் ஆகியோர் நடித்த ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி. நாம் அனைவரும் தொடர்புப்படுத்தக்கூடியப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வழக்கமான மலேசியர்கள் பற்றியக் கதை – தண்ணீர் பற்றாக்குறை. அவரதுக் கதை மலேசியர்களின் மனப்பான்மையையும் பெருந்தன்மையையும் நமக்கு நினைவூட்டும்.

• புகழ்பெற்ற இயக்குநர் கே.சி. சியூவின் ஆவணப்படங்களான Malaysia In Their Eyes, மற்றும் The Conservationists. 8 வெளிநாட்டவர்களின் கண்ணோட்டத்தில் நம் நாட்டின் அழகை சித்தரிக்கிறது, அவர்கள் ஏன் மலேசியாவைத் தங்கள் புதிய வீடாகத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதைப் பகிர்ந்துக் கொள்வர். மேலும், நாம் பழகியச் செழுமையானக் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையை நமக்கு நினைவூட்டுகிறது.

• 270 min Ke Piala Asia, 42 ஆண்டுகளில் முதல் முறையாக Piala Asia AFC 2023க்குத் தகுதிபெறும் பயணத்தில் மலேசிய கால்பந்து அணி அனுபவித்தக் கண்ணீர், மகிழ்ச்சி மற்றும் தியாகங்களை விவரிக்கும் ஆவணப்படம்.

• தேசியத் தினம் மற்றும் மலேசியத் தினத்தை முன்னிட்டு கெமிலாங் அலைவரிசையில் The Making of Air Force The Movie: Selagi Bernyawa-ஐக் கண்டு மகிழுங்கள். அரசு மலேசிய ஆகாயப்படை ஹீரோக்கள் மற்றும் அவர்கள் மற்றவர்களுக்குச் சேவைச் செய்து அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் ஹீரோக்களின் தேசப்பக்தி உணர்வுப் பற்றிய ஓர் அதிரடிக் கதை, Air Force.

இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 25 முதல் நாடு முழுவதும் திரையரங்குகளில் திரையிடப்படும். இதில், டத்தோ ஆதி புத்ரா, அய்மான் ஹக்கீம், நாஸ்-டி, சாரா அலி, கார்மென் சூ, அனஸ் ரிட்ஜுவான், ஜாக் டான், ஜோஹன் அஸாரி, இமான் கொரின், லுக்மான் ஹபிட்ஸ், பாப்லோ அமிருல், ஷா அல்யாஹ்யா, சங்கீதா கிருஷ்ணசாமி, அசிரா ஷபின்ஸ் மற்றும் பல பிரபல உள்ளூர் நடிகர்கள் நடித்துள்ளனர்.

• தொகுப்பாளர்களான அலிஃப் சதார், சிஸ்ஸி இமான் மற்றும் விருந்தினர்களான டத்தோ அஸ்னில் ஹஜி நவாவி மற்றும் மைக்கல் ஆங் ஆகியோருடனான உரையாடலின் மூலம் குழந்தைகள் பெரியவர்களை விட மலேசியாவை எவ்வாறு வித்தியாசமாகப் பார்க்கிறார்கள் என்பதை Chit Chat Ceria சித்தரிக்கின்றது.

Kampunglympics மற்றும் Agak-Agak சமையல் நிகழ்ச்சி, மலேசியர்களுக்கு விருப்பமானத் திரைப்படங்களான Ola Bola, Hantu Kak Limah, The Journey, Paskal, Polis Evo 1 & 2, The Kid from The Big Apple, P. Ramlee திரைப்படங்கள், Boboiboy The Movie 2 மற்றும் பலவற்றைக் கண்டு மகிழுங்கள்.

தேசியத் தினக் கொண்டாட்டம்

தேசியத் தினத்தை முன்னிட்டு, ஆஸ்ட்ரோ வானொலி அனைத்து 11 வானொலித் தரங்களிலும் SYOK செயலியிலும் உள்ளூர் இசை உட்படப் பல்வேறுச் சிறப்பு நிகழ்ச்சிகளைக் கொண்டிருக்கும். LITE எது நம்மை மலேசியர்களாக்குவது பற்றியக் கவர்ச்சிகரமானக் கதைகளைச் சித்தரிக்கும்.

அதேச் சமயம், ஹாப்-ஆன்-ஹாப்-ஆஃப் பேருந்தில் கோலாலம்பூரில் உள்ள புகழ்பெற்றப் இடங்களில் நடைப்பெரும் தேசியத் தின அணிவகுப்பில் ERA திறமையாளர்கள் கலந்துக் கொள்வர். இதற்கிடையில், ராகா மெர்டேக்கா உணவைச் சித்தரிக்கும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியைக் காண்பிக்கும், அதே நேரத்தில் MY உள்ளூர் கலைஞர்களைக் கொண்ட மெர்டேக்கா மினி கச்சேரி மூலம் அதன் நேயர்களை ஈடுபடுத்தும்.

ஆகஸ்டு 8 முதல் செப்டம்பர் 18 வரை 112 ரிங்கிட் வரை தள்ளுபடிப் பற்றுச்சீட்டுகளை கோ ஷோப்பின் ‘Go Gemilang Sale’ வழங்கும். ஆகஸ்டு 31 முதல் செப்டம்பர் 4 வரை மற்றும் செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 18 வரைக் குறைந்தபட்ச செலவுச் செய்யும் தேவையில்லாமல் சபா மற்றும் சரவாக் உட்பட நாடு முழுவதும் வாடிக்கையாளர்கள் இலவசப் பொருட்கள் அஞ்சலை அனுபவிக்க முடியும்.

கூடுதலாக, கோ ஷோப் அலைவரிசைகள், இணையதளம் மற்றும் கைப்பேசிச் செயலி ஆகியவற்றில் வாடிக்கையாளர்கள் நிர்வகிக்கப்பட்ட டிவி நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழலாம் – Kak Joy & The Geng, Inspirasi Malaysia, Keluarga Mahabbah, Go Cuti மற்றும் Rencah Go Shop. மேல் விபரங்களுக்கு, www.goshop.com.my-ஐ வலம் வாருங்கள் அல்லது Google Play மற்றும் App Store-இல் கோ ஷோப் செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்.

NJOI ஸ்டோர் www.njoi.com.my, நாடு முழுவதும் உள்ள NJOI சில்லறை விற்பனையாளர்கள் அல்லது Shopee, Lazada மற்றும் கோ ஷோப் உள்ளிட்ட இ-காமர்ஸ் தளங்களில், இப்போது முதல் செப்டம்பர் 30 வரை NJOI பெட்டியை வாங்கினால் NJOI வாடிக்கையாளர்கள் HD தொகுப்பு மற்றும் 30 ரிங்கிட் கிரெடிட்டை 2 மாதங்களுக்கு இலவசமாகப் பெறலாம்.

ஆஸ்ட்ரோ வெகுமதிகள் மூலம், 100 ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கெமிலாங் அலைவரிசைத் தொடர்பான முக்கியக் கேள்விகளுக்குப் பதிலளித்து ஹானர் பேண்ட் 6-ஐ (HONOR Band 6) வெல்வார்கள். போட்டி அகப்பக்கத்திற்கு இங்கேக் கிளிக் செய்யவும்.

சமூகத்திற்குத் திரும்பக் கொடுப்பது…

கெமிலாங் பெர்சாமா பிரச்சாரத்தை முன்னிட்டு, தேசிய இரத்த மையத்துடன் (Pusat Darah Negara) இணைந்து இரத்த தான நிகழ்விலும் பார்வையற்றோருக்கான மலேசியச் சங்கத்துடன் (Malaysian Association for The Blind) இணைந்து ஆடியோப் புத்தக முயற்சியிலும் ஆஸ்ட்ரோ முன்னணி வகிக்கிறது. ஒரு பை இரத்த தானம் செய்வதன் மூலம் 3 உயிர்களைக் காப்பாற்ற முடியும். ஜாலான் துன் ரசாக், புத்ராஜெயா மற்றும் மிட் வேலி மெகாமாலில் உள்ள PDN இரத்த தான மையங்களில் நீங்கள் அவ்வாறுச் செய்யலாம். மேல் விபரங்களுக்கு, www.pdn.gov.my-ஐ வலம் வாருங்கள்.

மலேசியர்களை ஆடியோபுத்தகப் பதிவில் தன்னார்வத் தொண்டுச் செய்ய ஊக்குவிப்பதன் மூலம் MAB உடன் இணைந்துப் பார்வைக் குறைபாடுள்ளச் சமூகத்திற்காக விழிப்புணர்வை ஏற்படுத்த ஆஸ்ட்ரோ ஆதரவளிக்கிறது மற்றும் உதவுகிறது. librarian@mab.org.myக்கு நீங்கள் ஆடியோ புத்தகப் பதிவைச் சமர்ப்பிக்கலாம். மேல் விபரங்களுக்கு, www.mab.org.my-ஐ வலம் வாருங்கள்.

கெமிலாங் பெர்சாமா பிரச்சாரம் பற்றிய மேல் விபரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும். #GemilangBersamaAstro