Home One Line P1 தேசிய கீதத்தை சீன மொழியில் பாடும் காணொளி குறித்து கல்வி அமைச்சு விசாரித்து வருகிறது!

தேசிய கீதத்தை சீன மொழியில் பாடும் காணொளி குறித்து கல்வி அமைச்சு விசாரித்து வருகிறது!

951
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய அரசியலமைப்பின் விதிகளை மீறும் எவருடனும் கல்வி அமைச்சகம் சமரசம் செய்யாது என்று இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சீன மொழியில் தேசிய கீதம் பாடும் பள்ளி மாணவர்களின் காணொளி ஒளிபரப்பு குறித்து  விரிவான விசாரணை நடந்து வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நமது நாட்டின் தேசிய கீதத்தை சீன மொழியில் பாடும் பள்ளி மாணவர்களின் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருவதை கல்வி அமைச்சு அறிந்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது, இது பல பள்ளிகளிலும் நடக்கிறதுஎன்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

சீன மொழியில் மாணவர் ஒருவர் தேசிய கீதத்தை பாடுவது குறித்த 1 நிமிட 23 வினாடி காணொளி கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதியன்று சிரம்பானில் உள்ள ஒரு பள்ளியில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறை விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.