Home நாடு கோலாலம்பூரில் பாரதியார் விழா – “சமுத்திர புத்திரன்-தமிழினம் தொடங்கிய முதல் கடல் பயணம்” நிகழ்ச்சியும் இடம்...

கோலாலம்பூரில் பாரதியார் விழா – “சமுத்திர புத்திரன்-தமிழினம் தொடங்கிய முதல் கடல் பயணம்” நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது

1082
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசிய பாரதி தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழா நாளை சனிக்கிழமை (டிசம்பர் 7) காலை 8.30 மணி தொடங்கி கோலாலம்பூர், துன் சம்பந்தன் மாளிகையில் உள்ள டான்ஸ்ரீ சோமா அரங்கத்தில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைமை நிர்வாகி டத்தோ பா.சகாதேவன், வணிகப் பிரமுகர் டத்தோ ரெனா துரைசிங்கம், டத்தோ ஆ.சோதிநாதன், நந்தன் என்ற சிதம்பரம், ஆர்.தியாகராஜன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

பாரதி முத்தமிழ் விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியும் பாரதியார் பிறந்த நாள் விழாவின் இடையே நடைபெறும்.

#TamilSchoolmychoice

இதே நிகழ்ச்சியில் ஜே.கே.விக்கி படைக்கும் “சமுத்திர புத்திரன் – தமிழினம் தொடங்கிய முதல் கடல் பயணம்” என்ற நிகழ்ச்சியும் இடம் பெறும்.