கோலாலம்பூர் – இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் புத்ரா உலக வாணிப மையத்தில் தொடங்கிய அம்னோவின் 2019-ஆம் ஆண்டுக்கான தேசியப் பொதுப் பேரவையில் கலந்து கொண்ட மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் உள்ளிட்ட முக்கிய மஇகா பொறுப்பாளர்கள் இந்திய பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து கலந்து கொண்டு அம்னோ பேராளர்களை அசத்தினர்.
அம்னோ கட்சியின் பாரம்பரிய சிவப்பு உடையில் அம்னோ பேராளர்கள் அனைவரும் திரண்டிருக்க மஇகா பொறுப்பாளர்கள் வெண்ணிற வேட்டியில் உலா வந்தனர்.
இதே மாநாட்டில் மசீச தலைவர் வீ கா சியோங், பாஸ் தலைவர் ஹாஜி ஹாடி அவாங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
#TamilSchoolmychoice
அம்னோ மாநாடு, மஇகா தலைவர்களின் வருகையை உள்ளிட்ட படக் காட்சிகளை இங்கே காணலாம்: