Home இந்தியா “பாரதியார் தமிழ் இருக்கை” பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் நிறுவப்படும் – மோடி அறிவிப்பு

“பாரதியார் தமிழ் இருக்கை” பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் நிறுவப்படும் – மோடி அறிவிப்பு

1113
0
SHARE
Ad

புதுடில்லி : இந்த நூற்றாண்டின் மாபெரும் தமிழ்க் கவிஞர் பாரதியாரின் நினைவு நாளின் நூற்றாண்டு விழா நேற்று செப்டம்பர் 11-ஆம் தேதி தமிழ்நாட்டிலும், உலக அளவிலும் கொண்டாடப்பட்டது.

அந்த நினைவு நாளை முன்னிட்டு, பாரதியாரை பெருமைகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.

பாரதியாரின் பெயரில் காசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி அமர்வு நிறுவப்படும் என்றும் நரேந்திர மோடி அறிவித்தார்.

#TamilSchoolmychoice

தனது டுவிட்டர் பக்கத்தில் பாரதியார் குறித்து மோடி பதிவிட்டார்.

“உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. சுப்பிரமணிய பாரதியின் 100 வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி அமர்வை நிறுவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது” என மோடி தனது பதிவில் குறிப்பிட்டார்.

“கங்கை நதிபுறத்து கோதுமை பண்டம், காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்” என்று தூரநோக்குச் சிந்தனையோடு பாடியவன் மகா கவி பாரதி.

அந்த கங்கை நதிக்கரையின் நகரான காசியில் உள்ள பல்கலைக் கழகத்தில் அவரின்  பெயரிலேயே புகழ் பெற்ற பழமையான இந்து பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவப்படும் பெருமை பாரதிக்கு வாய்த்துள்ளது. 


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal