திங்கட்கிழமை (செப்டம்பர் 13) முதல் ஆஸ்ட்ரோவில் ஜீ தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையில் முதல் ஒளிபரப்புக் காண்கிறது ‘சர்வைவர்’ என்னும் புதிய ரியாலிட்டி நிகழ்ச்சி.
தென்னிந்தியாவின் முன்னணி நடிகரான அர்ஜூன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.
அவருடன் இந்த நிகழ்ச்சியில் இணையும் பங்கேற்பாளர்கள் யார் என்பதைப் பார்ப்போம்:








‘சர்வைவர்’ எனும் அதே பெயரில் அனைத்துலக அளவில் புகழ்பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியின் முதல் ஒளிபரப்பை வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 13 முதல் கண்டு களிக்கலாம்.
‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் தொகுத்து வழங்கும் இத்தொடர், போட்டியாளர்கள் தங்களின் எல்லைகளையும் அச்சங்களையும் ஒரு புறம் ஒதுக்கித் தள்ளி, சான்சிபார் தீவில் உயிர்வாழ்வதற்கான மன வலிமையையும் உறுதியையும் நிரூபிக்கும் வண்ணம் அவர்களின் நிலையையும் வலிமையையும் சோதிக்கும்.
வி.ஜே.பார்வதி, விஜயலட்சுமி அகத்தியன், பெசன்ட் ரவி, காயத்திரி ரெட்டி, நந்தா தொரைராஜ், ஸ்ருஷ்டி டாங்கே, உமாபதி ராமையா, விக்ரந்த் சந்தோஷ் மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த 18 போட்டியாளர்களிடையே நிலவும் கடுமையானப் போட்டியை இத்தொடர் சித்தரிக்கும்.
‘சர்வைவர்’, செப்டம்பர் 13 முதல் இரவு 9.30 மணிக்குச் ஜீ தமிழ் எச்டி (அலைவரிசை 223), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal