Home நாடு ஷாரியா சட்டத் திருத்தம் – கூட்டரசுப் பிரதேசங்களுக்கு மட்டுமே!

ஷாரியா சட்டத் திருத்தம் – கூட்டரசுப் பிரதேசங்களுக்கு மட்டுமே!

884
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : இஸ்மாயில் சாப்ரி அமைச்சரவையில் பிரதமர் துறையின் மத விவகாரங்களுக்கான துணை அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பவர் பாஸ் கட்சியைச் சேர்ந்த அகமட் மார்சுக் ஷாரி .

முஸ்லீம் அல்லாத சமயங்களைப் பரப்புவதில் கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டங்கள் கொண்டுவரப்படும் என சில நாட்களுக்கு முன்னர் அகமட் மார்சுக் ஷாரி அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்புக்கு முஸ்லீம் அல்லாத சமயங்களின் பிரதிநிதிகள் கடுமையானக் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

#TamilSchoolmychoice

மலேசிய இந்து சங்கம், மலேசிய இந்து தர்ம மாமன்றம் போன்ற இந்து அமைப்புகளும் இந்த சட்டத் திருத்தங்களுக்கு எதிராகத் தங்களின் எதிர்ப்புகளைப் பதிவு செய்திருக்கின்றனர்.

கண்டனங்களுக்கு விளக்கமளித்த அகமட் மார்சுக் ஷாரி முஸ்லீம்களிடையே மற்ற மதத்தவர் பிரச்சாரம் செய்வதைக் கட்டுப் படுத்தும் புதிய சட்டம் கூட்டரசுப் பிரதேச மாநிலங்களுக்கு மட்டுமே உரியது எனக் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே மற்ற மாநிலங்களில் இது போன்ற சட்டங்கள் இருப்பதாகவும் அதற்கேற்பவே கூட்டரசுப் பிரதேசங்களில் இந்த சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்படும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

இந்த சட்டம், மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் மற்ற மதங்களைப் பின்பற்றும் உரிமைகளை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் அகமட் மார்சுக் ஷாரி உறுதியளித்திருக்கிறார்.

சபா மாநிலத்தின் எதிர்ப்பு

அகமட் மார்சுக் ஷாரி முன்மொழிந்த சட்டத் திருத்தத்தை எதிர்க்கும் முதல் மாநிலமாக சபா முன்வந்துள்ளது.

சபா முதலமைச்சர் ஹாஜிஜி நூர் விடுத்த அறிக்கை ஒன்றில் சபா மாநிலத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் மத நல்லிணக்கம் காரணமாக இந்த ஷாரியா சட்டத்தை நிராகரிக்கிறோம் எனத் தெரிவித்தார்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal