Home வணிகம்/தொழில் நுட்பம் சாம்சங்கிற்கு போட்டியாக வளைவு திரை கொண்ட திறன்பேசியை வெளியிட எல்.ஜி நிறுவனம் தயாராகி வருகின்றது!

சாம்சங்கிற்கு போட்டியாக வளைவு திரை கொண்ட திறன்பேசியை வெளியிட எல்.ஜி நிறுவனம் தயாராகி வருகின்றது!

531
0
SHARE
Ad

LG G2 launch

அக்டோபர் 25- கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வளைவான திரை கொண்ட திறன்பேசியை எல்.ஜி நிறுவனம் வெளியிடவிருப்பதாக வதந்திகள்  வெளிவந்தன. இந்நிலையில் எல்ஜி நிறுவனத்தின் எல்.ஜி ஜி பிளெக்ஸ் செல்பேசியின் புகைப்படங்கள் தற்போது அதன் செயலாக்கத்தில் இருப்பதாக உணர்த்தும் வீடியோ காட்சிகளை அர்ஜேந்தினா தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

அந்த திறன்பேசியை எல்.ஜி நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், அது சாம்சங் ரவுண்ட் செல்பேசிகளை விட 6 அங்குலம் அளவிலான ஓஎல்இடி திரையைக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்த திறன்பேசிகள் மீதான கவனத்தை ஈர்க்கும் பொருட்டு அர்ஜேந்தினா ஒளிப்பரப்பு நிறுவனத்தின் பத்திரிக்கையாளரான ஃபெடெரீக்கோ என்பவர் முதல் முறையாக தனது டிவிட்டரில் அந்த எல்.ஜி ஜி பிளெக்ஸ் திறன்பேசியின் சில புகைப்படங்களை வெளியிட்டார்.

எல்.ஜி.யின் ஜி பிளெக்ஸ் திறன்பேசியை வெளியிடுவதற்கான தேதி இன்னும் தெரியாத போதும், இம்மாதம் 10ஆம் தேதி தென் கொரியாவில் வெளியிடப்பட்ட சாம்சங்கின் வளைவு திரை கொண்ட திறன்பேசிக்குப் போட்டியாக தனது திறன்பேசிகளை வெளியிட எல்.ஜி நிறுவனம் அதிவேகமாக செயல்பட்டு வருகின்றது.

மேலும், தற்போது கிடைத்துள்ள தகவல்படி அந்த கைத்தொலைப்பேசிக்கு போட்டியாக ஜி பிளெக்ஸும் 13 மெகாபிக்ஸல் கேமராவைக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்றே வளைந்த வடிவமுடன் காணப்படும் இத்திறன்பேசி 1920×1080 பிக்சல் மற்றும் 5.7 அங்குலம் கொண்ட அமோலெட் திரை ஹெச்.டி திரை அமைப்பு, 7.9mm தடிமன், 154 கிராம் எடை கொண்டுள்ளது.