மார்ச் 25 – எல்ஜி நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ‘திறன்விளக்குகள்’ (Smart Bulb) ஐ அறிமுகப்படுத்த உள்ளது.
இது குறித்து அண்மையில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டிராய்டு 4.3 அல்லது ஐ.ஓ.எஸ் 6.0 இயங்குதளம் கொண்ட திறன்பேசிகள் மூலம் இயக்க கூடிய இந்த ‘திறன்விளக்குகள்’ (Smart Bulb) மற்ற விளக்குகளை விட 80 சதவீதம் மின்சார சிக்கனம் கொண்டுள்ளதாகவும், மேலும் பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இந்த திறன்விளக்குகளானது சாதாரண விளக்கைப் போல் ஒளி மட்டும் தராமல், கால சூழலிற்கு ஏற்ப தானாக ஒளி மாற்றம் செய்யக் கூடியதாகவும், எச்சரிக்கை மணி எழுப்பும் வீட்டு பாதுகாப்பு சாதனமாகவும் செயல்படுகின்றது.
32 அமெரிக்க டாலராக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள, இந்த விளக்கானது ஓரிரு மாதங்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.