Home இந்தியா நரேந்திர மோடிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் – உளவுத்துறை எச்சரிக்கை!

நரேந்திர மோடிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் – உளவுத்துறை எச்சரிக்கை!

486
0
SHARE
Ad

Gujarat-CM-Narendra-Modi1டெல்லி, மார்ச் 25 – பாரதீய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளரான நரேந்திர மோடி மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் டெல்லி சிறப்பு பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட இந்திய முஜாகிதீன் தீவிரவாதிகள் 4 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இந்திய உளவுத் துறை அதிகாரி தெரிவித்தாவது, ” நரேந்திர மோடி மீது தற்கொலை படையைச் சேர்ந்தவர்கள், கட்சி ஆதரவாளர் போல வந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும்,

#TamilSchoolmychoice

அந்த மனித வெடிகுண்டு தாக்குதல் மோடி போட்டியிடும் வாரணாசி அல்லது வதோதரா தொகுதியில் நடைபெறக்கூடும்” என்றும் எச்சரித்துள்ளார்.

இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதியான யாசின் பத்கலிடம் விசாரணை நடத்தியதிலும் மோடி மீதான தாக்குதல் வாய்ப்பு இருப்பதாக தெரியவந்ததாக தேசிய புலனாய்வு அமைப்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.