Home வணிகம்/தொழில் நுட்பம் ‘மேக்கர் ஸ்டூடியோ’ வை 500 மில்லியனுக்கு வாங்குகிறது ‘தி வால்ட் டிஸ்னி’

‘மேக்கர் ஸ்டூடியோ’ வை 500 மில்லியனுக்கு வாங்குகிறது ‘தி வால்ட் டிஸ்னி’

538
0
SHARE
Ad

Disneyமார்ச் 25 – கேலிச் சித்திரங்களுக்குப் பெயர் போன  ‘தி வால்ட் டிஸ்னி’ நிறுவனம், ‘யூ-டியூப்’ ன் ‘மேக்கர் ஸ்டூடியோ’ (Makers Studio) வை 500 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க உள்ளது.

இந்த வர்த்தகம் குறித்து டிஸ்னி நிர்வாக துணை தலைவர் கெவின் மேயர் கூறியதாவது, “குறுகிய வடிவ காணொளிக் காட்சிகளை இணையத்தில் வெளியிட்டு, வியக்கத்தக்க வேகத்தில் வளர்ந்து வரும் ‘மேக்கர் ஸ்டூடியோ’ நிறுவனத்தை, டிஸ்னி நிறுவனம் தன்னுடன் இணைத்துக் கொள்கின்றது” என்று கூறியுள்ளார்.

இந்த ஒப்பந்தமானது டிஸ்னியின் மூன்றாவது நிதி காலாண்டில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

‘மேக்கர் ஸ்டூடியோ’ நிறுவனம் உலகம் முழுவதிலும் 380 மில்லியன் சந்தாதாரர்களுக்கு காணொளிக் காட்சிகளை விநியோகிக்க உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.