Home One Line P1 வால்ட் டிஸ்னி 32,000 பேரை பணியிலிருந்து நீக்குகிறது

வால்ட் டிஸ்னி 32,000 பேரை பணியிலிருந்து நீக்குகிறது

582
0
SHARE
Ad

வாஷிங்டன்: வால்ட் டிஸ்னி நிறுவனம் புதன்கிழமை 32,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதாகக் கூறியது. இந்த எண்ணிக்கையானது முதலில், அதன் பூங்காக்களில் இருந்து செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட 28,000 எண்ணிக்கையை விட அதிகமாகும். நிறுவனம் கொவிட்-19 தொற்றுநோயால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் போராடும் நிலை ஏற்பட்டுள்ளதாக அது கூறியுள்ளது.

பணிநீக்கங்கள் 2021- ஆம் ஆண்டின் முதல் பாதியில் நடைமுறைக்கு வரும் என்று நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், டிஸ்னி தெற்கு கலிபோர்னியாவில் உள்ள அதன் பூங்காவிலிருந்து கூடுதல் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கியதாகக் கூறியது.

#TamilSchoolmychoice

புளோரிடாவில் உள்ள டிஸ்னியின் பூங்காக்கள் மற்றும் அமெரிக்காவிற்கு வெளியே உள்ளவை தொற்று பாதிப்பில் பெரிதும் சிக்காமல் இந்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் திறக்கப்பட்டன.

கொவிட்-19 தொற்று சம்பவங்களின் இரண்டாவது அலைகளை எதிர்த்துப் போராட பிரான்ஸ் ஊரடங்கை விதித்தபோது டிஸ்னிலேண்ட் பாரிஸ் கடந்த மாத இறுதியில் மீண்டும் மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆயினும், ஷாங்காய், ஹாங்காங் மற்றும் தோக்கியோவில் நிறுவனத்தின் பூங்காக்கள் இன்னும் செயல்படுகின்றன.