Home One Line P2 “ஹாட்ஸ்டார்” கட்டண வலைத் திரைத் தளம் சிங்கப்பூரில் தொடக்கம்

“ஹாட்ஸ்டார்” கட்டண வலைத் திரைத் தளம் சிங்கப்பூரில் தொடக்கம்

780
0
SHARE
Ad

சிங்கப்பூர் : உலகம் எங்கும் பிரபலமாகி வருகின்றன கட்டண வலைத் திரை (ஓ.டி.டி) சேவைகள். இந்தியாவில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பெரும்பான்மையாகக் கொண்டு சேவை வழங்கும் வலைத் திரை கட்டணத் தளம் ஹாட்ஸ்டார்.

அந்தத் தளம் எதிர்வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் சிங்கப்பூரில் தனது சேவைகளைத் தொடங்கவிருக்கிறது.

கிரிக்கெட் ஆட்டங்களை நேரலையாக ஒளிபரப்புவதிலும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குவதிலும் ஹாட்ஸ்டார் இந்தியாவில் முன்னணி வகிக்கிறது.

#TamilSchoolmychoice

சிங்கப்பூரில் இயங்கும் ஸ்டார்ஹப் பிளஸ் (StarHub Plus) தளத்தின் வழியாக தனது சேவைகளை ஹாட்ஸ்டார் வழங்குகிறது.

சிங்கப்பூரில் உள்ள பயனர்கள் இரண்டு விதங்களில் ஹாட்ஸ்டார் சேவைகளைப் பெறலாம்.

ஆண்டுக்கு சிங்கப்பூர் டாலர் 69.98 செலுத்தி நேரடியாக ஹாட்ஸ்டார் தளத்திலிருந்து சேவைகளை அவர்கள் பெறலாம்.

அல்லது ஏற்கனவே ஸ்டார்ஹப் இந்தியன் பிளஸ் சந்தாதாரர்கள் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்தாமல் 12 முதல் 24 மாதங்களுக்கு ஹாட்ஸ்டார் சேவைகளைப் பெறலாம்.

ஸ்டார்ஹப் இந்தியன் பிளஸ் சேவையைப் பெறுவதற்கு சந்தாதாரர்கள் மாதத்திற்கு 15 சிங்கப்பூர் டாலர் செலுத்தி 24 மாத ஒப்பந்தத்தை உறுதி செய்யவேண்டும். அதுவே 12 மாத ஒப்பந்தமாக வைத்துக் கொண்டால் மாதத்திற்கு 25 சிங்கப்பூர் டாலர்களை சந்தாதாரர்கள் செலுத்த வேண்டும்.

தமிழ் நிகழ்ச்சிகளோடு, இந்தி நிகழ்ச்சிகளையும், தமிழ், இந்தித் திரைப்படங்களையும் ஹாட்ஸ்டார் சேவையின் மூலம் பயனர்கள் கண்டு களிக்க முடியும்.

இந்தியா தவிர்த்து ஹாட்ஸ்டார் சேவைகள் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் வழங்கப்படுகிறது. தற்போது சிங்கப்பூரில் அறிமுகமாகிறது.

இந்த ஹாட்ஸ்டார் சேவைகள் மலேசியாவில் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. எனினும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஏற்கனவே, ஆஸ்ட்ரோ மூலமாக ஒளிபரப்பாகி வருகின்றன.

ஹாட்ஸ்டார் சேவைகள் டிஸ்னி சேனல் தளத்துடன் இணைந்து வழங்கப்படுகின்றன.