Home நாடு சைருல் ஆஸ்திரேலிய குடிநுழைவு தடுப்பு காவலில்!

சைருல் ஆஸ்திரேலிய குடிநுழைவு தடுப்பு காவலில்!

985
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 22 – அல்தான்துயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள காவல்துறை முன்னாள் அதிரடிப்படை வீரர் சைருல் அசார் ஓமார் குயின்ஸ்லாந்தில் கைது செய்யப்பட்ட பின்னர், அங்குள்ள குடிநுழைவு தடுப்பு மையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை மாலை அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கார் (படம்) உறுதி செய்தார்.

Khalid Abu Bakar

#TamilSchoolmychoice

“அவர் தற்போது குடிநுழைவு தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளார். அடுத்து ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு மேற்கொண்டு விவரங்களைப் பெற உள்ளோம்,” என்றார் காலிட்.

இண்டர்போல் எனப்படும் அனைத்துலக காவல் துறை பிரிவு விடுத்த சிவப்பு வண்ண முன் அறிவிப்பை அடுத்து கைது செய்யப்பட்ட சைருலை, பிரிஸ்பேனில் உள்ள குடிநுழைவு அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகம் செய்தி வெளியிட்டள்ளது.

தேடப்படும் குற்றவாளிகளை பிடிப்பதற்கு முன்னால் அவர்களை சிவப்பு வண்ண பட்டியலிட்டு , அவர்கள் தேடப்படும் குற்றவாளிகள் என மற்ற நாடுகளுக்குத் தெரிவிப்பது அனைத்துலக காவல் துறையின் நடைமுறையாகும்.

இந்த விவகாரத்தில் மலேசியாவின் விருப்பம் குறித்து ஆஸ்திரேலிய குடிநுழைவுத்துறை நன்கு அறிந்திருப்பதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதமே சைருஸ் ஆஸ்திரேலியா சென்றதாக நம்பப்படுகிறது.