சென்னை, ஜனவரி 22 – திருட்டு விசிடி, டிவிடி போன்றவற்றை ஒழித்து, புதிய படங்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்த்து அவர்களை மகிழ்விப்பதோடு, தயாரிப்பாளர்களுக்கும் லாபத்தை ஈட்டித் தரும் இயக்குநர் சேரனின் சி2எச் (சினிமா டு ஹோம்) மாபெரும் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது.
இத்திட்டத்திற்கு திரைத்துறையினர் மட்டுமின்றி, பொதுமக்களிடத்தில் இருந்தும் பெருமளவு வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனிடையே, சேரன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படமான ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ திரையரங்குகளிலும், சி -டு-எச்சிலும் ஒருசேர வெளியிடும் சுமூகமான பேச்சுவார்த்தையை சம்பந்தப்பட்டவர்களிடம் தான் பேசி வருவதாகவும், எது எப்படியோ வரும் ஜனவரி 30-ம் தேதி படம் வெளியாவது உறுதி என்றும் இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்ட சி2எச்-ன் வளர்ச்சிப் பாதை பற்றிய புதிய காணொளி ஒன்றை நேற்று சேரன் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் சி-2-எச் கடந்த வந்த பாதை குறித்தும், அதில் செய்யப்பட்டுள்ள கடின முயற்சிகள் குறித்து சேரன், உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் பாக்கியராஜ் உட்பட பல முன்னணி இயக்குநர்கள் பேசியுள்ளனர்.
அந்த காணொளி உங்களின் பார்வைக்கு:-