Home இந்தியா இந்தியாவைத் தாக்க ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டம்: அமெரிக்க நாளிதழ் திடுக்கிடும் தகவல்!

இந்தியாவைத் தாக்க ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டம்: அமெரிக்க நாளிதழ் திடுக்கிடும் தகவல்!

455
0
SHARE
Ad

isis-flag (1)அமெரிக்கா, ஜூலை 29- ஐ.எஸ் பயங்கரவாதிகள் இந்தியா மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு வருவதாக, உருது மொழியில் எழுதப்பட்ட ஆவணத்தை மேற்கோள் காட்டி, அமெரிக்க நாளிதழ் யூஎஸ்ஏ டுடே திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.

‘இஸ்லாமிக் ஸ்டேட்டின் சுருக்கமான வரலாறு’ என்னும் பெயர் கொண்ட அந்த ஆவணம் 32 பக்கங்களைக் கொண்டுள்ளது. அந்த ஆவணத்தில், “இந்தியாவின் மீதான தாக்குதல் தெற்காசிய ஜிகாதிகளின் புனிதப் போர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது தலிபான் இயக்கத் தீவிரவாதக் கும்பலோடு தொடர்புடைய பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவனிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. உருது மொழியில் புலமை பெற்ற அறிஞர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்த ஆவணத்தை உளவுத்துறை அதிகாரிகளால் நன்றாக ஆராய்ந்த பிறகே இச்செய்தியை அந்த நாளிதழ் வெளியிட்டுள்ளது.

இந்த ஆவணத்தின் மூலம் பெறுகின்ற செய்தி என்னவெனில்:

“ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்தத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாகச் செய்து வருகிறது. இந்தியா மீதான இந்தத் தாக்குதல், அமெரிக்காவுக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்குமான சண்டையை மீண்டும் தூண்டி விடுவதாக இருக்கப் போகிறது. அமெரிக்கா  பல நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தால், கண்டிப்பாகத் தீவிரவாதிகள் இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து தாக்குதலில் இறங்குவோம். அப்படி நடக்கும் பட்சத்தில் இதுதான் கடைசி யுத்தமாக இருக்கும்” என்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தீவிரவாத அமைப்புகளிலேயே மிகவும் கொடூரமான அமைப்பாக ஐஎஸ் அமைப்பு வளர்ந்து வருகிறது. அது ஏற்கனவே ஈராக், சிரியா நாடுகளைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்திப் பல மாகாணங்களைத் தங்களது வசம் கொண்டு வந்துள்ளது. பிரான்ஸிலும் இருவேறு தாக்குதலை நடத்தியுள்ளது.

மேலும், இயக்கத்தைப் பலப்படுத்த உலகின் பல நாடுகளில் இருந்தும் இளைஞர்களை ஈர்த்து இயக்கத்துக்கு ஆள் சேர்த்து வருகிறது.

ஏற்கனவே அல்கொய்தா தீவிரவாத அமைப்பு இந்தியாவில் கிளை தொடங்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகளின் இந்தத் தாக்குதல் முயற்சி இந்தியாவுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.