Home இந்தியா அப்துல் கலாமிற்கு அஞ்சலி: திரையரங்கில் நாளை சினிமாக் காட்சிகள் ரத்து!

அப்துல் கலாமிற்கு அஞ்சலி: திரையரங்கில் நாளை சினிமாக் காட்சிகள் ரத்து!

511
0
SHARE
Ad

CHXNRBnUcAA8AoJசென்னை, ஜூலை 29- மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறவிருப்பதால், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நாளை தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும்,தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன்,“நாளை வணிகர்கள் தங்கள் கடைகளை அடைப்பதுடன்,நல்லடக்கம் நடைபெறும் அதே நேரத்தில் தமிழகம் எங்கும் அவரவர் பகுதிகளில் மவுன ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்துவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் பகல் நேரக் காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் திரையரங்க உரிமையாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice