ராமேஸ்வரம், ஜூலை 30 – மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே.அப்துல் கலாமின் இறுதிச்சடங்குகள் இன்று அவரது சொந்த ஊரான இராமேஸ்வரத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட ஏராளமான தலைவர்களும், பொதுமக்களும் அவருக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னதாக நேற்று மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக அன்னாரின் நல்லுடல் இராமேஸ்வரம் கொண்டு வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அதன் படத்தொகுப்பைக் காணலாம்: