Home இந்தியா அப்துல் கலாம் நல்லுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அப்துல் கலாம் நல்லுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

644
0
SHARE
Ad

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????ராமேஸ்வரம், ஜூலை30- முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நல்லுடல் இஸ்லாமிய மதத்தின் வழக்கப்படி இறுதிச் சடங்குகள் முடிந்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

முழு ராணுவ மரியாதையுடன் முப்படை வீரர்கள் தாங்கிச் சென்று கலாமின் நல்லுடலை உறவினர்களிடம் ஒப்படைக்க, அவரது நல்லுடலுக்கு உறவினர்கள் இஸ்லாமிய முறைப்படி இறுதிச் சடங்குகளைச் செய்தனர். பின்னர், தயாராகத் தோண்டி வைக்கப்பட்டிருந்த குழியில் நல்லுடல் வைக்கப்பட்டு, ராணுவ மரியாதையுடன் குண்டுகள் முழங்க, நல்லடக்கம் செய்யப்பட்டது.

நல்லடக்கத்தின் போது அனைத்துத் தலைவர்களும் எழுந்து நின்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். பலர் கண்ணீர் விட்டுக் கதறினர்.

#TamilSchoolmychoice

பிறந்து வளர்ந்த மண்ணிலேயே அம்மகானின் நல்லுடல் அடங்கிப் போனது.

அம்மகான் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தலைவர்கள் எல்லோரும் மலர்களைத் தூவி இறுதி மரியாதை செய்தனர். பலர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தைத் தொட்டுக் கும்பிட்டு விட்டுக் கனத்த இதயத்தோடு திரும்பிச் சென்றனர்.

பிரதமர் மோடியும் மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டுப் புறப்பட்டுச் சென்றார்.