Home இந்தியா மும்பை தொடர் குண்டு வெடிப்பு முக்கியக் குற்றவாளி யாகூப் கான் மரணம்

மும்பை தொடர் குண்டு வெடிப்பு முக்கியக் குற்றவாளி யாகூப் கான் மரணம்

541
0
SHARE
Ad

yaகராச்சி, ஆகஸ்ட் 8- மும்பை தொடர்குண்டு வெடிப்பில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளிகளில் ஒருவனான யாகூப்கான் பாகிஸ்தானிலுள்ள கராச்சியில்  மாரடைப்பு ஏற்பட்டு  மரணமடைந்து விட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது.

257 பேர் உடல் சிதறி மாண்டதற்கும் 713 பேர் படுகாயமடைந்து உடல் உறுப்புகள் சிதைந்ததற்கும் காரணமான மும்பை தொடர் குண்டுவெடிப்பு முக்கியக் குற்றவாளிகளான தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன், யாகூப் கான் ஆகியோர் பல்வேறு நாடுகளில் அடைக்கலமாகித் தலைமறைவாக உள்ளனர்.

இதில் ஒரு முக்கியக் குற்றவாளியான யாகூப் மேமன் பிடிபட்டுத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுக்  கடந்த 30-ஆம் தேதி அதிகாலை தூக்கில் இடப்பட்டான்.

#TamilSchoolmychoice

யாகூப் மேமன் தூக்கில் இடப்பட்டதற்குப் பழி வாங்கப் போவதாக அவனது அண்ணன் டைகர் மேமன் தனது தாயிடம் தொலைபேசியில் ஆவேசமாகப் பேசியதாகவும் செய்தி வெளியாகிப் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

இந்நிலையில், மற்றொரு முக்கியக் குற்றவாளியாகிய  யாகூப் கான் என்ற யெடா யாகூப்பும் பாகிஸ்தானில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

மும்பை குண்டுவெடிப்புக்கு ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளைக் கொண்டு வந்து டைகர் மேமனுக்குக் கொடுத்தது இந்த யாகூப் கான் தான்.

குண்டுவெடிப்புக்குப் பின் மும்பையிலிருந்து துபாய்க்குத் தப்பினான் யாகூப் கான். பின்பு அங்கிருந்து பாகிஸ்தானுக்கு வந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தான்.

இவனைக் கைது செய்வதற்குச் சர்வதேசப் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுப் பல்லாண்டுகளாகத் தேடப்பட்டு வந்த நிலையில், கராச்சியில் அவன் இறந்துவிட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது.

மும்பை காவல்துறை ஆணையர் இத்தகவலை உறுதி செய்துள்ளார்.