கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 – பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் தலைமையில் மலேசியாவில் ஜனநாயகம் இறந்துவிட்டது என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்துள்ளார்.
“அது (ஜனநாயகம்) இறந்துவிட்டதற்குக் காரணம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர், அரசாங்க நிறுவனங்களையெல்லாம் மாற்றியமைத்து, தான் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக அவற்றையெல்லாம் கருவிகளாகப் பயன்படுத்துகின்றார்” என்று மகாதீர் தனது வலைத்தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.