Home உலகம் இலங்கை அதிபர் சிறிசேனாவின் பாதுகாப்புப்படை முற்றிலும் மாற்றியமைப்பு!

இலங்கை அதிபர் சிறிசேனாவின் பாதுகாப்புப்படை முற்றிலும் மாற்றியமைப்பு!

569
0
SHARE
Ad

rajaகொழும்பு, ஆகஸ்ட் 10- இலங்கையில் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிபர் சிறிசேனாவின் பாதுகாப்புப் படையினர் மாற்றப்பட்டுள்ளனர்.

இலங்கையில் வரும் 17–ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆங்காங்கே சில வன்முறைச் சம்பவங்களும் தாக்குதல்களும் நடந்து வருகின்றன.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் மர்மநபர்கள் துப்பாக்குச் சூடு நடத்தியதில் ஒரு பெண் உயிரிழந்தார். பலர் துப்பாக்கிக் குண்டுகள் தாக்கிப் படுகாயமடைந்தனர். அந்தத் தாக்குதலுக்கு ராஜபக்சேவின் தூண்டுதலே காரணம் என்றும் அவருக்கு எதிரானவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே அந்தத் தாக்குதல் நடந்தது என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

#TamilSchoolmychoice

மேலும், தற்போது ரக்பி விளையாட்டு வீரர் வாசிம் தாஜுதீன் காருடன் எரிந்து பிணமாகக் கிடந்ததற்கு முன்னாள் அதிபர் ராஜபக்சேவும் அவரது மகனும் தான் காரணம் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால்,முக்கியத் தலைவர்கள் அனைவருக்கும் அங்கு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு வருகிறது.

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவுக்கு, முன்னாள் அதிபர் ராஜபக்சேவால் அளிக்கப்பட்ட பாதுகாப்புப் படையே இதுநாள் வரை நீடித்து வந்தது.

இந்நிலையில் அந்தப் பாதுகாப்புப்படை வீரர்களில் சிலருக்கு ரக்பி விளையாட்டு வீரர் வாசிம் தாஜுதீன் மரணத்தில் தொடர்பு இருப்பதாகப் புகார் எழுந்தது.

ஏற்கனவே சிறிசேனாவுக்கும் ராஜபக்சேவுக்கும் அரசியலில் பனிப்போர் நடந்து வருகிறது.ராஜபக்சே பிரதமராகத் தேர்தலில் போட்டியிடக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தவர் சிறிசேனா. எனவே, ராஜப்க்சேவுக்கு ஆதரவாகப் பாதுகாப்புப் படையினரால் சிறிசேனாவின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்பதால், அதிபர் சிறிசேனாவின் பாதுகாப்புப் படையினர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

தற்போது அவருக்கு முற்றிலும் புதிதான சிறப்புப் பாதுகாப்புப்படை நியமிக்கப்பட்டுள்ளது.