Home Featured நாடு 2.6 பில்லியன் ரிங்கிட் தொடர்பில் நஜிப் மீது பிகேஆர் வழக்கு!

2.6 பில்லியன் ரிங்கிட் தொடர்பில் நஜிப் மீது பிகேஆர் வழக்கு!

821
0
SHARE
Ad

Nurul Izzahகோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 2.6 பில்லியன் ரிங்கிட் நிதி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, த வால் ஸ்ட்ரீட் ஜார்னல் பத்திரிக்கை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து, நஜிப் மீது தேர்தலில் முறைகேடுகள் செய்துள்ளதாகக் கூறி பிகேஆர் கட்சி இன்று வழக்குத் தொடுத்துள்ளது.

இது குறித்து பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் கூறுகையில், “இன்று தொடுக்கப்பட்டுள்ள இந்த வழக்கில், அம்னோ பொதுச்செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதோடு, 1எம்டிபி நிறுவனம், தேர்தல் ஆணையம் ஆகியவையும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஊழல் விவகாரத்தை வால் ஸ்ட்ரீட் ஜார்னல் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததின் விளைவாக, 13-வது பொதுத்தேர்தலில் வெற்றியடைவதற்காக தேசிய முன்னணி செய்துள்ள முறைகேடுகளையும் அதன் மூலம் வெளியே தெரியவந்துள்ளது. அதன் அடுத்த கட்ட நடவடிக்கை தான் இந்த வழக்கு என்றும் நூருல் இசா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தேர்தலில் செலவு செய்வதற்கான வரைமுறைப்படி பார்த்தால், 2.6 பில்லியன் என்பது வரைமுறை தொகையைவிட 26 முறை அதிகம் என்றும் நூருல் இசா இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.