Home Featured நாடு டத்தோ முனியாண்டிக்கு எதிரான பழனிவேலுவின் நஷ்டஈடு கோரும் வழக்கு தள்ளுபடி!

டத்தோ முனியாண்டிக்கு எதிரான பழனிவேலுவின் நஷ்டஈடு கோரும் வழக்கு தள்ளுபடி!

816
0
SHARE
Ad

Palanivelகோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – மஇகா அம்பாங் தொகுதியைச் சேர்ந்த மஇகா கிளைத் தலைவர் டத்தோ என்.முனியாண்டிக்கு எதிரான 1 மில்லியன் ரிங்கிட் நஷ்ட ஈடு கோரும் அவதூறு வழக்குத் தொடுத்திருந்த டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலின் மனுவை, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

பழனிவேலுக்கு எதிராக நடவடிக்கும் எடுக்கும் வழக்குரிமை டத்தோ முனியாண்டிக்கு இருப்பதாகவும், அந்தத் தடையுத்தரவு சட்டத்திற்கு உட்பட்டு தான் பெறப்பட்டது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

muniyaandi

#TamilSchoolmychoice

(டத்தோ என். முனியாண்டி)

மேலும் அந்தத் தடையுத்தரவைப் பெறுவதற்கு டத்தோ முனியாண்டி முன்வைத்த காரணங்கள் செல்லுபடியாகும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கில், டத்தோ முனியாண்டி சார்பில் அவரது வழக்கறிஞர்கள் வசந்தி ஆறுமுகம் மற்றும் எட்மண்ட் மில்கியூ ஆகியோர் பிரதிநிதித்தனர்.