Home இந்தியா சுந்தர் பிச்சை, பிரதமர் மோடிக்கு நன்றி;மோடியைச் சந்திக்கவும் விருப்பம்!

சுந்தர் பிச்சை, பிரதமர் மோடிக்கு நன்றி;மோடியைச் சந்திக்கவும் விருப்பம்!

656
0
SHARE
Ad

10-1433914883-sundar-pichai2நியூயார்க், ஆகஸ்ட் 12- கூகுள் இணையதளத்தின் முதன்மைச் செயல் தலைவராகப் பதவியேற்றுள்ள தமிழராகிய சுந்தர் பிச்சை, இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

சுந்தர் பிச்சை கூகுள் இணையதளத்தின் முதன்மைச் செயல் தலைவராக நியமிக்கப்பட்டவுடன், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

தனக்கு வாழ்த்துத் தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு,சுந்தர் பிச்சை தனது டுவிட்டர் மூலம் நன்றி கூறியுள்ளார். மேலும், பிரதமர் மோடியை நேரில் சந்திக்கவும் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஆகையால், விரைவில் சுந்தர் பிச்சை, மோடியைச் சந்திக்க வரலாம் எனத் தெரிகிறது.