Home Featured நாடு கோலகங்சாரில் பழனிவேல் அணியினர் தே.மு.வுக்கு ஆதரவாகப் பிரச்சாரம்! – பழனிவேல் வரவில்லை!

கோலகங்சாரில் பழனிவேல் அணியினர் தே.மு.வுக்கு ஆதரவாகப் பிரச்சாரம்! – பழனிவேல் வரவில்லை!

935
0
SHARE
Ad

கோலகங்சார் – கோலகங்சார் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் தேசிய முன்னணி வேட்பாளரை ஆதரித்து, மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இருப்பினும், இந்த பிரச்சாரக் கூட்டத்தில் பழனிவேல் கலந்து கொள்ளவில்லை.

Kuala Kangsar by-election-Palanivel supportersகோலகங்சார் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பழனிவேல் தரப்பினரில் சிலர்…

#TamilSchoolmychoice

பழனிவேல் தரப்பில் இயங்கி வரும் டத்தோ எஸ்.சோதிநாதன், ஏ.கே.இராமலிங்கம், டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம், ஆகியோர் இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Kuala Kangsar-by election-sothi campaign

டத்தோ சோதிநாதனுக்கு மாலை அணிவிப்புடன் கோலகங்சாரில் வரவேற்பு

கடந்த மே 31ஆம் தேதி, கோலாலம்பூரில் நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மஇகா முன்னாள் தலைவர் ஜி.பழனிவேல், இரட்டை நாடாளுமன்றத் தேர்தல்களில் தனது அணியினர் ஏ.கே.இராமலிங்கம் தலைமையில் தேசிய முன்னணிக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து நேற்று அவரது தரப்பினர் கோலகங்சாரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Kuala Kangsar by-election-Ramalingam

பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் ஏ.கே.இராமலிங்கம்…

Kuala Kangsar-by-election-palanivel faction campaign

பழனிவேல் தரப்பினர் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்…