சிரியா, ஆகஸ்ட் 20- சிரியாவின் வடகிழக்குப் பகுதியான பலிபெய்ரூட். இப்பகுதியில் குர்திஷ் முஸ்லிம்கள் அதிகம் வாழ்கின்றனர். இங்கு நேற்று நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 16 பேர் பலியானார்கள்.50 பேர் படுகாயமடைந்தனர்.
வெடிபொருள் நிரப்பிய காரை ஓட்டி வந்த தீவிரவாதி, குர்துப் பாதுப்புப் படையினர் மீது மோதி வெடிக்கச் செய்தான். இந்தக் குண்டுவெடிப்பால் அந்தப் பகுதியே குலுங்கியது.
கடந்த ஆண்டு முதல் சிரியாவில் குர்திஷ் படையினருக்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புத் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் யுத்தம் நடந்து வருகிறது.
அமெரிக்க வான்வழித் தாக்குதலின் பயனாகச் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றிய பகுதிகள் சிலவற்றைக் குர்தீஷ் படைகள் கைப்பற்றியது.
இந்நிலையில், ஐஎஸ் தீவிரவாதிகள் காமிஷிலி நகரில், குர்துத் தன்னாட்சி அமைப்புக்குரிய ‘அசாயிஷ்’ என்ற பாதுகாப்பு அமைப்பைக் குறி வைத்து இந்தத் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.