Home இந்தியா ஜெயலலிதாவை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமி இன்றோடு ஓய்வு!

ஜெயலலிதாவை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமி இன்றோடு ஓய்வு!

810
0
SHARE
Ad

kumarasa-680x365பெங்களூர் – தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்து, அவரது அரசியல் வாழ்வில் இன்னோர் அத்தியாயத்தைத் தொடங்கி வைத்த கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி இன்றுடன் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தவுடன், அடுத்த 10 ஆண்டுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்கிற சூழ்நிலை உருவாகி, ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை அதோடு முடிந்தது என எல்லோரும் நினைத்தார்கள்.

ஆனால், அதை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதாவிற்குச் சாதகமாய்த் தீர்ப்புச் சொன்னார் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி. அந்தத் தீர்ப்பு தமிழக அரசியலில் பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

#TamilSchoolmychoice

மே 11-ஆம் தேதி குமாரசாமி ஜெயலலிதாவை விடுதலை செய்து குமாரசாமி தீர்ப்பளித்தார். கீழ் நீதிமன்றத் தீர்ப்பில் இருந்து 100 சதவீதம் மாறுபட்ட தீர்ப்பாக இது இருந்ததால் நாடே திரும்பிப் பார்த்தது.

மேலும், வருவாய் மற்றும் செலவீனம் ஆகியவற்றுக்கு இடையே கணக்கீடு செய்வதில் பெரும் பிழை இருப்பதாகவும், தப்பான கணக்கீட்டின் அடிப்படையில், ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் பல்வேறு விமர்சங்கள் எழுந்தன.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா அரசு மற்றும் திமுக சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அவரது அந்தத் தீர்ப்பால் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை மீண்டும் எரிமலையாய் எழுந்தது. மீண்டும் முதலமைச்சர் ஆனார்.

அவரது அரசியல் வாழ்க்கை அவ்வளவுதான் என்று இறுமாந்திருந்த அத்தனை பேருடைய ஆசையிலும் மண்ணை அள்ளிப் போட்டு, ஜெயலலிதா அரசியலில் மறுமலர்ச்சியை உண்டாக்கிய நீதிபதி சி.ஆர்.குமாரசாமி இன்றுடன் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

குமாரசாமியின் சொந்த ஊர் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்திலுள்ள மளவள்ளி. ஜெயலலிதாவின் பிறந்த ஊரும் மண்டியா மாவட்டம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.