Home Featured தொழில் நுட்பம் தொழில்நுட்ப உலகின் புதிய சாளரங்களைத் திறந்த விண்டோஸ் 95-ன் வயது 20!

தொழில்நுட்ப உலகின் புதிய சாளரங்களைத் திறந்த விண்டோஸ் 95-ன் வயது 20!

599
0
SHARE
Ad

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????கோலாலம்பூர் – 1995-ம் ஆண்டு, ஆகஸ்ட் 24-ம் தேதி, தொழில்நுட்ப உலகில் புதிய வரலாறு உருவாக்கப்பட்டதாக புகழ்பெற்ற செய்தி நிறுவனமான ‘நியூ யார்க் டைம்ஸ்’ (New York Times) மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒரு தயாரிப்பு தொடர்பாக செய்தி வெளியிட்டு இருந்தது. அந்த தயாரிப்பு தான் ‘விண்டோஸ் 95’ (Windows 95).

இன்று நமக்கும் கணினிக்குமான பிணைப்பு பற்றி பெரிய அளவில் விளக்கத் தேவையில்லை. 20 வருடங்களுக்கு முன்பாக, கணினிக்கும் பயனர்களுக்குமான பிணைப்பில் மிகப் பெரும் இடைவெளி இருந்து வந்தது. பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள், அந்த இடைவெளியை குறைக்க அரும்பாடுபட்டுக் கொண்டிருந்தன.

இந்த சூழலில் தான் மைக்ரோசப்ட், விண்டோஸ் 95-ஐ அறிமுகப்படுத்தி, அந்த இடைவெளியை புலிப்பாய்ச்சலாக பாய்ந்து தாவிக் குதித்தது. கடைநிலைப் பயனர்கள் பெரிய அளவில் அறிந்திராத பன்முகச் செயல்பாடுகள் (Multi-Tasking) கொண்ட டூல்பார், ஸ்டார்ட் பட்டி என புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி பிரமிக்க வைத்தது.

#TamilSchoolmychoice

விண்டோஸ் 95 கொண்டிருந்த புதிய அம்சங்களால், அதன் விற்பனை ஒரே வருடத்தில் மட்டும் 40 மில்லியனைக் கடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி தான் அந்நிறுவனத்தை, இன்றைய விண்டோஸ் 10 வரை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

தங்களின் செயல்முறை பற்றி தலைமை நிர்வாகி நாதெல்லா ஒருமுறை, ஊழியர்களுக்கு அனுப்பி உள்ள அறிக்கையில், “நாம் பழமையை விரும்புவதை விட புதுமைக்குத் தான் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இப்படி தனித்திறமையான எண்ணங்களும், புத்தாக்கமும் தான் மைக்ரோசப்ட்டின் இத்தகைய வெற்றிகளுக்குக் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.