Home Featured நாடு ஜிஞ்சாங் காவல் நிலையத்தில் எங்கள் போராட்டம் தொடரும் – மாணவர்கள் அறிவிப்பு

ஜிஞ்சாங் காவல் நிலையத்தில் எங்கள் போராட்டம் தொடரும் – மாணவர்கள் அறிவிப்பு

500
0
SHARE
Ad

Fahmi-Zainolகோலாலம்பூர் – நாடாளுமன்றத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட மாணவர்கள், தற்போது ஜிஞ்சாங் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலும், தங்களது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.

தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு முன்போ அல்லது ஜிஞ்சாங் காவல்நிலையத்திலோ தங்களது போராட்டத்தை தொடரப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதவி விலக வேண்டும் என்று கூறி நாடாளுமன்றத்தின் முன் போராட்டம் நடத்தி வந்த மாணவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice