Home இந்தியா ஜெயா-சோ சந்திப்பு காணொளியை வெளியிட்ட ஜெயா தொலைக்காட்சி ஊழியர் கைது!

ஜெயா-சோ சந்திப்பு காணொளியை வெளியிட்ட ஜெயா தொலைக்காட்சி ஊழியர் கைது!

532
0
SHARE
Ad

27-1440667870-cho-ramaswamy-jayalalitha--சென்னை – கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் மூத்த பத்திரிக்கையாளரும் தனது நண்பருமான சோ இராமசாமியை, முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பின் படக்காட்சிகள் ஜெயா தொலைகாட்சியில் வெளியாகி இருந்தாலும், அவர்களின் உரையாடல்கள் ஆரம்பத்தில் வெளியாக வில்லை.

பொதுவாக ஜெயலலிதா பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ஜெயா தொலைக்காட்சி புகைப்படக்காரர்கள், செய்தியாளர் மற்றும் தமிழக அரசின் செய்திப்பிரிவு புகைப்படக்காரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அரசின் செய்திப் பிரிவில் இருந்து ஜெயா தொலைக்காட்சி தவிர மற்ற ஊடகங்களுக்கு அளிக்கப்படும் காட்சிகளில் ஒலி (Audio) இருக்காது.

இந்நிலையில் தான், ஜெயா-சோ சந்திப்பு காணொளி உரையாடல்களுடன் வெளியானது. குறிப்பாக இந்த காணொளி வாட்சாப்பில் வெளியானது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா நிகழ்ச்சிகளில் ஜெயா தொலைக்காட்சி ஒளிப்பதிவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

மேலும், இந்த காணொளியை வெளியிட்டது யார் என காவல்துறையும் விசாரணையில் இறங்கியது. அப்போது தான், ஜெயா தொலைக்காட்சியின் படத்தொகுப்பாளர் சக்திவேல் என்பவர் காணொளியை வெளியிட்டது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.