Home Featured நாடு பிரசவ வார்டில் புகைப்படம் எடுத்த விவகாரம்: விசாரணை முடிந்துவிட்டதாக சுப்ரா தகவல்

பிரசவ வார்டில் புகைப்படம் எடுத்த விவகாரம்: விசாரணை முடிந்துவிட்டதாக சுப்ரா தகவல்

533
0
SHARE
Ad

Dr Subra - MIC PRESIDENTபுத்ராஜெயா- பிரசவ வார்டில் புகைப்படம் எடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சு தனது விசாரணையை முடித்துவிட்டதாக அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது ஒரு மாதத்தில் தெரியவரும் என்றும் அவர் கூறினார்.

“எச்சரிக்கை, பணி இடைநீக்கம் அல்லது பணி நீக்கம் என இதற்கான தண்டனைகள் வகைப்படும். தற்போது ஒழுங்கு நடவடிக்கை குழு இதுகுறித்து ஆராய்ந்து வருகிறது,” என்றார் டாக்டர் சுப்ரமணியம்.

#TamilSchoolmychoice

அது தம்படம் (செல்ஃபி) அல்ல என்றும், படத்தில் உள்ள மருத்துவரை அவரது சக மருத்துவரே படமெடுத்துள்ளார் என்றும் அவர் விளக்கினார். புகைப்படம் எடுத்தவரும் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அக்குறிப்பிட்ட புகைப்படம் ஜோகூர்பாரு அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுபவரின் அந்தரங்க உறுப்புகளும் தெளிவாகத் தெரியும் வகையில் படமெடுக்கப்பட்டதால் இது விவகாரமானது.