Home Featured நாடு மலேசியா வீழ்ந்துவிடவில்லை – பால் லோ கூறுகிறார்

மலேசியா வீழ்ந்துவிடவில்லை – பால் லோ கூறுகிறார்

523
0
SHARE
Ad

PAUL-LOWபுத்ராஜெயா – ரிங்கிட் மதிப்பு வீழ்ச்சி மற்றும் ஊழல் விவகாரங்கள் காரணமாக மலேசியா சபிக்கப்பட்டு விடவில்லை (வீழ்ந்துவிடவில்லை) என டத்தோ பால் லோ தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக வெளிவரும் தலைப்புச் செய்திகள் அனைத்தும் கவலைக்குரிய தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அனைத்தையும் மீறி மலேசியாவின் பொருளாதார நிலை நன்றாகவே உள்ளது என்றார்.

“பல்வேறு தரப்பும் சித்தரித்தது போல் நிலைமை அவ்வளவு மோசமாகிவிடவில்லை. இதற்கு முன்னர் பொருளாதார ரீதியில் நாடு பல வெற்றிகளைக் கண்டுள்ளது.

#TamilSchoolmychoice

“மலேசியாவின் வருடாந்திர ஒட்டுமொத்த வளர்ச்சி விதிதமானது அனைத்துலக சராசரியைவிட அதிகம். இங்கு வேலைவாய்ப்பின்னை விகிதமோ குறைவு. வறுமையில் வாடுவோர் விகிதாச்சரமும் குறைவு. உலகளவில் போட்டிக்குரிய பொருளாதார நிலை கொண்ட 20 நாடுகளின் பட்டியலில் மலேசியாவும் ஒன்று என உலக பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது” என்றார் பால் லோ.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தனது ஊழியர்களை தாமே தேர்வு செய்யவும், பணி நீக்கம் செய்யவும் தேவையான அதிகாரத்தை வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.