“மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைத்தின் செயல்பாடுகளை உலகத்தரத்தில் உயர்த்துவதும், அதன் மீது அனைத்துலக மக்கள் கொண்டிருக்கும் மதிப்பை வளர்ப்பதும் தான் இந்த வாரியத்தின் நோக்கமாகும்” என்றும் பால் லோ தெரிவித்துள்ளார்.
ஆனால் இவ்வாரியத்தில் இடம்பெறவுள்ள அதிகாரிகளின் பெயர்களை பால் லோ தெரிவிக்கவில்லை. இருப்பினும் ஹாங்காங் மற்றும் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த ஊழல் ஒழிப்பு ஆணைய உயர் அதிகாரிகள் இதில் இடம்பெறுவார்கள் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, அமைச்சரவையில் உள்ள சிறப்பு அதிகாரிகளும் ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும், இதனால் சிறப்பு அதிகாரிகளின் மத்தியில் வெளிப்படையான நிலை அதிகரிக்கும் என்றும் பால் லோ கூறியிருப்பதாக பெர்னாமா செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“சிறப்பு அதிகாரிகளின் பணி மிகவும் முக்கியமானது. அவர்களுக்கு அரசாங்கத்தின் பல ரகசியங்கள் தெரிய நேரிடும் . எனவே அவர்களும் ஆண்டு தோறும் தங்களது சொத்து விவரங்களை ஊழல் ஒழிப்பு ஆணையத்திடமும், பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடமும் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் ஊழல் மற்றும் பல முறைகேடுகள் ஏற்படுவதைக் குறைக்கலாம்” என்று பால் லோ தெரிவித்துள்ளார்.