Home Featured நாடு ஊழல் தடுப்பு மாநாட்டில் நஜிப் கலந்து கொள்ளாதது ஏன்? – பிரதமர் துறை அமைச்சர் விளக்கம்

ஊழல் தடுப்பு மாநாட்டில் நஜிப் கலந்து கொள்ளாதது ஏன்? – பிரதமர் துறை அமைச்சர் விளக்கம்

639
0
SHARE
Ad

PAUL-LOWகோலாலம்பூர் – கோலாலம்பூரில் இன்று தொடங்கும் 16-வது அனைத்துலக ஊழல் தடுப்பு மாநாட்டில் பிரதமர் நஜிப் துன் ரசாக் கலந்து கொள்ளாததற்குக் காரணம் அவரது தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை தான் என பிரதமர் துறை அமைச்சர் பால் லோ தெரிவித்துள்ளார்.

அம்மாநாட்டில் அவருக்கு எதிராக ‘விரோதமான வரவேற்புகள்’ கிடைக்கலாம் என எதிர்பார்ப்புகள் நிலவியதையடுத்து, அந்நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டாம் என நஜிப்புக்கு ஆலோசனைகள் கூறப்பட்டதையும் பால் லோ உறுதிப்படுத்தியுள்ளார்.

 

#TamilSchoolmychoice