Home நாடு “ஐபிசிஎம்சி யை விட இஏஐசி தான் சிறந்தது” – பால் லோ கருத்து

“ஐபிசிஎம்சி யை விட இஏஐசி தான் சிறந்தது” – பால் லோ கருத்து

582
0
SHARE
Ad

paul-low-may18

கோலாலம்பூர், ஜூன் 10 -காவல்துறைப் புகார்கள் மற்றும் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் சார்பற்ற ஆணையத்தை (ஐபிசிஎம்சி) விட தற்போது இயங்கி வரும்  புதுபிக்கப்பட்ட நேர்மை காக்கும் ஆணையம் (இஏஐசி) சிறந்தது என்று பிரதமர் துறை அமைச்சர் பால் லோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து பால் லோ மேலும் கூறுகையில், “தற்போது இருக்கும் நேர்மை காக்கும் ஆணையம் (இஏஐசி) அதன் பலவீனங்கள் அடையாளம் காணப்பட்டு வலுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் காவல்துறையுடன் கூடிய மேலும் 18 துறைகளை சீர்படுத்த இயலும். புதிய ஐபிசிஎம்சியை போல் செயல்படுவதில் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாது. எனவே நேர்மை காக்கும் ஆணையம் உண்மையில் தனது பணியை செய்வதற்கு தேவையான வளம், அதிகாரம் மற்றும் செல்வாக்கு நிறைந்தது” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் கடந்த ஜூன் மாதம் 4 ஆம் தேதி நேர்மை காக்கும் ஆணையம் தொடர்பாக தான் அளித்த விளக்கத்தைத் தொடர்ந்து, நேர்மை காக்கும் ஆணையத்தை மேம்படுத்துவது தான் நடைமுறைக்கு ஒத்துவரும் என்று அமைச்சரவையில் முடிவெடுத்திருப்பதாகவும் பால் லோ தெரிவித்துள்ளார்.