கோலாலம்பூர்: காவல்துறைப் புகார்கள் மற்றும் காவல் துறையினரின் முறை தவறியநடவடிக்கைகளை விசாரிக்கும் அரசாங்க சார்பற்ற ஆணையத்தை நிறுவும் (ஐபிசிஎம்சி) மசோதா மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் லியூ வுய் கியோங் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு மார்ச் மாத மக்களவைக் கூட்டத்தொடருக்கு அரசாங்கம் அதனை ஒத்திவைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஐபிசிஎம்சி மசோதா தொடர்பான விவாதம் ஒத்திவைக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
கடந்த அக்டோபரில், இந்த மசோதா நாடாளுமன்றத்திற்கு கொண்டு செவதற்கு முன்பதாக, நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழுவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த அனைத்து கருத்துக்களையும் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் ஏற்கும் என்பதைக் காண்பிப்பதற்காக அவசர அவசரமாக சட்டத்தை வகுக்க எண்ணம் கொள்ளவில்லை என்று லியூதெளிவுபடுத்தினார்.
ஐபிசிஎம்சி மசோதா முதன்முதலில் கடந்த ஜூலை 18-ஆம் தேதியன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.