Home One Line P1 முன்னாள் சட்ட அமைச்சர் லியூ வுய் கியோங் காலமானார்

முன்னாள் சட்ட அமைச்சர் லியூ வுய் கியோங் காலமானார்

759
0
SHARE
Ad

கோத்தா கினபாலு : நம்பிக்கைக் கூட்டணி அமைச்சரவையில் சட்ட அமைச்சராகப் பணியாற்றிய லியூ வுய் கியோங் இன்று வெள்ளிக்கிழமை காலை 11.40 மணியளவில் காலமானார்.

நுரையீரல் தொற்று காரணமாக அவர் காலமானார் என நம்பப்படுகிறது.

சபா வாரிசான் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான லியூ சபா, பத்து சாப்பி நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.

#TamilSchoolmychoice

முதுகுத் தண்டு பிரச்சனை காரணமாக அவர் கோத்தா கினபாலுவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் பின்னர் அவருக்கு நுரையீரல் தொற்று கண்டது. சில நாட்களுக்கு முன்னர் அவரது உடல் நிலை மோசமடைந்து சுயநினைவற்ற நிலைக்கு ஆளானார் என ஊடகங்கள் தெரிவித்தன.