Home One Line P2 டிரம்பு, மெலானியா இருவருக்கும் கொவிட்19 தொற்று இருப்பது உறுதியானது

டிரம்பு, மெலானியா இருவருக்கும் கொவிட்19 தொற்று இருப்பது உறுதியானது

749
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் இருவருக்கும் கொவிட்19 தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

முன்னதக, தாமும், மனைவி மெலனியா டிரம்பும் கொவிட்19 தொற்று பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையைத் தொடங்குவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார்.

டிரம்பின் நெருங்கிய உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்ஸ் வியாழக்கிழமை (அக்டோபர் 1) தொற்றுக்கு சாதகமாக பரிசோதிக்கப்பட்டதை உறுதிப்படுத்திய பின்னர் அவர் இதனை தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

மினசோட்டாவில் புதன்கிழமை மாலை பிரச்சாரத்தில் கலந்து கொண்ட ஹிக்ஸ் இலேசான அறிகுறிகளை உணரத் தொடங்கினார். விமானத்தில் பயணம் செய்த அவர், விமானத்தில் இருந்த மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டார் மற்றும் வியாழக்கிழமை அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

டிரம்ப் வியாழக்கிழமை பிற்பகுதியில் பதிவிட்ட டுவிட்டர் பதிவில் : “முதல் பெண்மணியும் நானும் எங்கள் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். இதற்கிடையில், நாங்கள் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையைத் தொடங்குவோம். ”

டிரம்பிற்கு ஆலோசகராக பணியாற்றும் ஹிக்ஸ், செவ்வாயன்று கிளீவ்லேண்டில் நடந்த பிரச்சாரத்திற்கு டிரம்புடன் பயணம் செய்தார்.